செங்கல்பட்டு, ஆக.12: செங்கல்பட்டில் நேற்றுமுன்தினம் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், நள்ளிரவு முதல் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கன மழை கொட்டி தீர்த்தது. இதில், பரனூர், மகேந்திராசிட்டி, சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், திம்மாவரம், ஆத்தூர், பாலூர், ஆகிய பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.
+
Advertisement



