உத்திரமேரூர், ஆக.12: உத்திரமேரூர் அருகே விவசாய நிலத்தில் நடமாடிய நட்சத்திர ஆமை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. உத்திரமேரூர் அருகே குண்ணவாக்கம், மலையாங்குளம், மருதம், பெருங்கோழி, கட்டியாம்பந்தல், காவணிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காப்புக்காடுகள் உள்ளது. இந்த காப்புக்காடுகளில் மயில்கள், முயல்கள், குரங்குகள், குள்ளநரி உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் அருங்குன்றம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று நட்சத்திர ஆமை ஒன்று வலம் வந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அறிய வகை நட்சத்திர ஆமை உலா வருவதை பார்த்து வனத்துறை அலுவலர்களுக்கு தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து அறிய வகை நட்சத்திர ஆமையை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.



