குன்றத்தூர், டிச.10: சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக காய்கறி விலை அதிகரித்து காணப்பட்டதுடன், வியாபாரம் மந்த நிலையில் காணப்பட்டது. மழை ஓய்ந்து 2 நாட்களாகியும் விலை குறையவில்லை. இந்நிலையில், நேற்று சில காய்கறிகளின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, வெங்காயம் கிலோவுக்கு ரூ.2 உயர்ந்து, முதல் தரம் ரூ.30க்கும், இரண்டாம் தரம் ரூ.26க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஊட்டி கேரட் ரூ.10 உயர்ந்துள்ளது. இதன்மூலம் முதல் தரம் ரூ.50க்கும், இரண்டாம் தரம் ரூ.45க்கும், மூன்றாம் தரம் ரூ.40க்கும் விற்கப்பட்டது. கேரட் விலையில் மாற்றமின்றி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது.
பீன்ஸ் ஒரு கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து, முதல் தரம் ரூ.75க்கு விற்பனை செய்யப்பட்டது. இரண்டாம் தரம் ரூ.70க்கும், மூன்றாம் தரம் ரூ.65க்கும் விற்கப்பட்டது. தக்காளி முதல் தரம் ரூ.40க்கும், இரண்டாம் தரம் ரூ.35க்கும், மூன்றாம் தரம் ரூ.30க்கும், நவீன தக்காளி ஒரு கிலோ ரூ.50க்கும் விற்கப்பட்டது. சின்ன வெங்காயம் முதல் தரம் ரூ.70, இரண்டாம் தரம் ரூ.65, மூன்றாம் தரம் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. கர்நாடக வெங்காயம் ஒரு கிலோ ரூ.20ல் இருந்து ரூ.24 வரை விற்கப்படுகிறது. உருளைக்கிழங்கு ரூ.40, ரூ.35, ரூ.23 என விற்கப்பட்டது. கர்நாடக பீட்ரூட் ரூ.25 முதல் ரூ.30 வரையும், சவ்சவ் ரூ.10 முதல் ரூ.15 வரையும், முள்ளங்கி ரூ.20 முதல் ரூ.25வரையும் விற்பனை செய்யப்பட்டது.
முட்டைக்கோஸ் ரூ.10 முதல் ரூ.15 வரையும், வெண்டைக்காய் ரூ.30 முதல் ரூ.40 வரையும், உஜாலா கத்திரிக்காய் ரூ.15 முதல் ரூ.20 வரையும், வரி கத்திரிக்காய் ரூ.10 முதல் ரூ.15 வரையும், காராமணி ரூ.35 முதல் ரூ.40 வரையும், பாகற்காய் ரூ.20 முதல் ரூ.25 வரையும் விற்பனையாகிறது. புடலங்காய் ஒரு கிலோ முதல் தரம் ரூ.25, இரண்டாம் தரம் ரூ.20க்கும், சுரக்காய் ரூ.20 முதல் ரூ.25க்கும், சேனைக்கிழங்கு ரூ.30 முதல் ரூ.40க்கும் விற்கப்பட்டது. முருங்கைக்காய் முதல் தரம் ஒரு கிலோ ரூ.250க்கும், இரண்டாம் தரம் ரூ.230க்கும், மூன்றாம் தரம் ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டது. சேமக்கிழங்கு ரூ.15 முதல் ரூ.20 வரையும், காலிபிளவர் ரூ.25 முதல் ரூ.35 வரையும், வெள்ளரிக்காய் ரூ.15 முதல் ரூ.20 வரையும், ஜி.4 மிளகாய் ரூ.60க்கும், பச்சை மிளகாய் ரூ.30 முதல் ரூ.35 வரையும், பட்டாணி ரூ.80 முதல் ரூ.90 வரையும் விற்கப்பட்டது. இதேபோல், இஞ்சி முதல் தரம் ரூ.70, இரண்டாம் தரம் ரூ.65, மூன்றாம் தரம் ரூ.60க்கும், பூண்டு ரூ.110, ரூ.80, ரூ.50 ஆகிய விலையிலும் விற்கப்பட்டது.


