Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வீட்டை காலி செய்ய எதிர்ப்பு கிராம மக்கள் போராட்டம்

மதுராந்தகம், ஆக.8: மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே தேன்பாக்கம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்டோர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களில் சிலர், பட்டா மற்றும் வீட்டுவரி செலுத்திய ஆவணங்களை வைத்துள்ளனர். இந்நிலையில், தனிநபர் மற்றும் வருவாய் துறையினர், இப்பகுதிக்கு வந்து, ‘வீடுகளை காலி செய்ய வேண்டும்’ என கூறியுள்ளனர்.  இதனால் அப்பகுதி மக்கள், ‘நாங்கள் காலி செய்ய மாட்டோம், எங்களை வீட்டை விட்டு வெளியேற்ற கூடாது’ எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் எங்களை மிரட்டி வீடுகளை காலி செய்ய சொல்கிறார்கள். எங்களிடம் பட்டா, வீட்டு வரி செலுத்திய ரசீது உள்ளது. குழந்தைகள், வயதானவர்களை வைத்துக்கொண்டு நாங்கள் எங்கே செல்வது? கருணை அடிப்படையில் எங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். எங்களை காலி செய்யாதவாறு முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்றனர்.