செங்கல்பட்டு, ஆக.8: பழங்குடியின விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் துரித மின் இணைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2026-2027ம் நிதியாண்டில் தாட்கோ மூலமாக 100 பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தினை 90 சதவீதம் மானியத்துடன் செயல்படுத்துவதற்கு ரூ.2.33 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, newscheme.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் பழங்குடியின விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.



