Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பொற்சோதிநாதர் திருக்கோயிலில் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர், ஜூன் 8: உத்திரமேரூர் அடுத்த ஒழையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு பொற்சோதிநாதர் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. உத்திரமேரூர் அடுத்த ஒழையூர் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீஅருள்மிகு ஸ்ரீ பொற்சோதிநாதர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களும் கோயில் வளாகத்தில் வாஸ்துஹோமம், சாந்தி ஹோமம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதணை ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன.  இதனைத் தொடர்ந்து நேற்று காலை மூன்றாம்கால யாகசாலை பூஜை முடிந்தபின் மேளதாளங்கள் முழுங்க வானவேடிக்கைகளுடன் சிவாச்சாரியர்களின் வேதமந்திரங்கள் ஒலிக்க புனித நீர் கொண்டு வரப்பட்டு விமான கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி தீபாராதனை காண்பித்தபின் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க கும்பாபிஷேக வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

இந்த விழாவையொட்டி கோயில் வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.