காஞ்சிபுரம், ஆக.7: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலைஞரின் 8ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் உள்ள அனைத்து கிளைகளிலும், கலைஞரின் உருவப் படத்தை அலங்கரித்து வைத்து, மலர்மாலை அணிவித்து அந்தந்த கிளைகளில் உள்ள திமுகவினர் அனைவரும் திரண்டு வந்து, அஞ்சலி செலுத்திட வேண்டும்.
அதேபோல, கலைஞரின் நினைவு நாளான இன்று காலை 8 மணியளவில் சென்னை அண்ணாசாலை அண்ணா சிலை அருகில் அமைந்துள்ள கலைஞரின் உருவ சிலை அருகே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறவுள்ளது. இப்பேரணியில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள திமுகவினர் அனைவரும் அணி திரண்டு வந்து பங்கேற்று சிறப்பித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.




