செங்கல்பட்டு, ஆக.7: செங்கல்பட்டு தாலுகா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்நிலையத்திற்கு தொடந்து புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் நேற்று தீவிர கண்காணிப்பில் இருந்த போலீசார் திம்மாவரம் அண்ணா நகரைச் சேர்ந்த பிரேம் குமார் (எ) கருப்பன், (31) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்மீது வழக்குப்பதிவு செய்து கருப்பனை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து அந்த வாலிபரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஐமன்ஜமால் மாவட்ட கலெக்டர் வீரப்பனிடம் பரிந்துரை செய்தார். பின்னர் கலெக்டர் உத்தரவின்படி செங்கல்பட்டு தாலுகா காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் குற்றவாளிமீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை செங்கல்பட்டு சிறைச்சாலையில் இருந்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.



