Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

செங்கல்பட்டில் நாளை குடும்ப அட்டை குறைதீர் முகாம்

செங்கல்பட்டு, ஆக. 7: இதேபோல் செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை வட்ட அளவில் கீழ்க்கண்ட கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.  செங்கல்பட்டு வட்டத்தில் சிங்கப்பெருமாள்கோவில், செய்யூர் வட்டத்தில் சூனாம்பேடு, மதுராந்தகம் வட்டத்தில் தண்டரை, திருக்கழுக்குன்றம் வட்டத்தில் புதுப்பட்டினம், திருப்போரூர் வட்டத்தில் சிறுதாவூர், வண்டலூர் வட்டத்தில் மண்ணிவாக்கம் ஆகிய இடங்களில் குறைதீர் முகாம் நடக்கிறது.

இதில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.