Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்

செங்கல்பட்டு, அக்.2: செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் 4ம் தேதி காலை 10 மணி முதல் 6ம் தேதி (வாக்குப்பதிவு நாள்) நள்ளிரவு 12 மணி. வரை மற்றும் 9ம் தேதி (வாக்கு எண்ணிக்கை நாள்) முழுவதும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினங்களில் மதுபான கடைகள், மதுபானக்கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.