உத்திரமேரூர், அக்.2: உத்திரமேரூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித்திட்ட முகாம் நேற்று நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் மாணவர்கள் பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக நேற்று நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஞானபிரகாசம் தலைமை தாங்கினார். ஆசிரியர் கோகுலசூர்யா அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்வின் நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பின் இயக்குனர் ஜெயராமன், உத்திரமேரூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்று நுகர்வோர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்தும், நுகர்வோரின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் நுகர்வோர் குறித்தான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


