காஞ்சிபுரம், அக்.2: காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினமான இன்று காலை 10 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இதில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் திருப்பாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல், ஜல் ஜீவன் திட்டம் தூய்மை பாரத இயக்க ஊடகம் திட்டம் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக விவாதிக்கப்படும்.
மேலும் கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட வரவு, செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தில் தகவல் பலகையில் வெளியிட வேண்டும், பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு செலவு கணக்கு படிவம் 30 சுருக்கம் வைக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


