Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கூடுவாஞ்சேரி ரயில்வே மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த மொபட்

கூடுவாஞ்சேரி, ஆக. 1: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வடமாநில வாலிபர் ஒருவர், வடமாநில பெண் ஒருவரை மொபட்டில் ஏற்றிக்கொண்டு மாடம்பாக்கம் நோக்கி செல்லும் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மொபட் திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டதும் வடமாநில வாலிபர் மற்றும் பெண் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மறைமலைநகர் தீயணைப்பு துறையினர் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த மொபட் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். இதனையடுத்து தீயில் எரிந்து நாசமான வாகனத்தை அப்புறப்படுத்திவிட்டுச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட்டை ஓட்டி வந்தது வட மாநிலத்தை சேர்ந்த தம்பதியா? அல்லது கள்ளக்காதல் ஜோடியா? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மொபட் தானாக எரிந்ததா? அல்லது தீ வைத்து கொளுத்திவிட்டுச் சென்றார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி, மொபட்டை சாலையில் விட்டுச் சென்ற வடமாநிலத்தவர்களை தேடி வருகின்றனர்.