Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்துகொண்டார். செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் செல்வகணபதி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி ரமணிபாய் (46). இந்நிலையில், பாஸ்கர், ரமணிபாய் ஆகியோர் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ரமணிபாய் நேற்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார் ரமணிபாயின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.