Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குரூப் 2, 2ஏ தேர்வுகள் செங்கல்பட்டில் 10,343 பேர் எழுதினர்: காஞ்சியில் 9,722 பேர் எழுதினர்

செங்கல்பட்டு நவ.2: செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 2025-26ம் ஆண்டிற்கான குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளுக்கான தேர்வு 44 மையங்களில் நேற்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. அதன்படி, செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப் 2 தேர்வு மையத்தில் கலெக்டர் மு.வீரப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள், தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக சிறப்புப் பேருந்து வசதிகள் ஏற்பாடு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

44 தேர்வு மையங்களில், தேர்வுப் பணிகளை கண்காணித்திட துணை ஆட்சியர் நிலையில் 2 வருவாய் கோட்டாட்சியர்களும், ஆய்வுப் பணி மேற்கொள்ள வருவாய் ஆய்வாளர் நிலையில் 44 அலுவலர்களும், வினா, விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்குக் கொண்டு செல்ல 9 இயங்கும் குழுக்களும், தேர்வு மையங்களில் பாதுகாப்புப் பணி மேற்கொள்ள 44 காவலர்களும் மற்றும் தேர்வு மையத்திற்கு தலா ஒருவர் வீதம் 44 வீடியோ பதிவாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 13,945 தேர்வர்கள் இத்தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 10,343 தேர்வர்கள் இத்தேர்வினை எழுதினர்.

தேர்வர்கள் தேர்வு எழுத அமைதியான சூழ்நிலையினை ஏற்படுத்திட மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகிதா பர்வின், செங்கல்பட்டு வட்டாட்சியர் பூங்கொடி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 3 தாலுகாக்களில் 27 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் 11,608 பேர் விண்ணப்பித்த நிலையில் நேற்று 9,722 பேர் தேர்வு எழுதினர். 1,886 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வை கண்காணிக்க 3 கண்காணிப்பு குழுக்கள், 4 பறக்கும் படைகள், 9 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.