Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று தலைக்கவசத்தின் அவசியம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், கொடியசைத்து தொடங்கி வைத்தார் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை இணைந்து தலைக்கவசத்தின் அவசியம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது. அந்த பேரணியை, மாவட்ட கலெக்டர் கலைச்செல்விமோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் தலைக்கவசத்தின் அவசியம் குறித்த வாசகம் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஒட்டி, விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.இப்பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி, மூங்கில் மண்டபம் வழியாக யாத்ரி நிவாஸ் வரையில் சுமார் 200 இருசக்கர வாகனத்தில் தலைக்கவசத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகையுடன் சென்றனர்.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், காவல் துறை போக்குவரத்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.