செங்கல்பட்டு, அக். 30: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் விபத்து ஒத்திகை நேற்று நடைபெற்றது. இதில் மருத்துவ மாணவர்கள் பயணம் செய்த பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதுபோல் தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டது. மேலும் விபத்து நடந்தவுடன் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் கண்முன்னே நிகழ்த்தப்பட்டன.
மேலும் விபத்தில் சிக்கிய ஓட்டுநரை காரில் இருந்து மீட்டு, சம்பவ இடத்திலேயே மருத்துவர்கள் அவசர கால சிபிஆர் சிகிச்சை அளிப்பது போன்ற காட்சிகள் தத்ரூபமாகச் செய்து காண்பிக்கப்பட்டன.
விபத்து நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் அரசு துறைகள் எவ்வாறு ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளைச் செய்யும் என்பதை பொதுமக்களுக்கு விளக்குவதற்காக இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட தீயனைப்புதுறை அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார்.
மாவட்ட உதவி தீயனைப்புதுறை அலுவலர் சங்கர் மற்றும் அவர்களுடைய தீயனைப்புதுறை குழுவினர் செங்கல்பட்டு போக்குவரத்து ஆய்வாளர் ஆனந்தராஜ், மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், செவி
லியர்கள் கலந்துகொண்டனர்.


