Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கல்பட்டு மாவட்ட புதிய திட்ட இயக்குனர் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு, ஜூன் 30: செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக இருந்த ஸ்ரீதேவி, மகளிர் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட புதிய திட்ட இயக்குனராக ஸ்ருதி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக பணியில் இருந்தார். புதிதாக நியமிக்கப்பட்ட திட்ட இயக்குனருக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், ஊரக வளர்ச்சித் துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.