Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமி எங்கே? சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கேள்வி

மதுராந்தகம், செப்.29: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பகுதியில் மாற்றுத்திறனாளி மாணவி, நள்ளிரவு நேரத்தில் மர்ம நபரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார். இந்நிலையில் மதுராந்தகம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்தி, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயந்தி உள்ளிடோர் பாதிக்கப்பட்ட சிறுமியையும், அவரது பெற்றோரையும் நேற்று சந்தித்து ஆறுதல் கூற செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது போக்சோ மருத்துவ வார்டில் சென்று பார்த்தபோது அங்கு சிறுமியும், அவரது பெற்றோரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது தகவல் தெரியாது என தெரிவித்துள்ளனர்.

பின்னர், பாலபாரதி நிருபர்களிடம் கூறுகையில், போக்சோ வழக்கு என்பால் சிறுமியின் பெற்றோர் இருந்தால் ஆறுதல் சொல்ல நினைத்தோம். ஆனால் மருத்துவத்துறை அதிகாரிகளும், காவல்துறையும் எங்களுக்கு உரிய பதில் சொல்லவில்லை. சிறுமி சிகிச்சை பெறுவதாக சொன்ன வார்டிலும் யாரும் இல்லை. இதுவரை அந்த சிறுமி கிராமத்துக்கும் போய் சேரவில்லை. வீட்டுக்கும் போகாமல், மருத்துவமனையிலும் இல்லை என்றால் எங்கே போனார்கள்?

முதலமைச்சர் இங்கு வந்து ஜெம் கிரானைட் வீரமணியால் எப்படி சிறுமிகள் சீரளிக்கப்பட்டார்கள் என்று அடிவயிற்றிலிருந்து கத்தினாரே. இப்போ இந்த 10 நாளுக்குள் இதே செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு சிறுமிகள், அதிலும் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கிறாங்கன்னு சொல்லிட்டு அவரை எங்கு போய் மறைச்சு வச்சுருக்கீங்க? இதுதான் உங்க சீற்றத்துல சிறுமியை பாதுகாக்குற லட்சணமா? இதனை மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.