Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நெல் மூட்டைகளுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

செங்கல்பட்டு, செப். 29: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட பட்டிக்காடு ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு அதன் மூலம் விவசாயிகளுக்கு தமிழக அரசின் ஆதார விலை வழங்கப்பட்டது. இந்த வருடத்திற்கான நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்நிலையில் பட்டிக்காடு ஊராட்சிக்கு நெல் கொள்முதல் நிலையம் மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கு பெரும் சிரமம் அடைந்து வந்தனர். சிலர் தனியார் வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் விற்று நஷ்டம் அடைந்தனர். இதனால் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி நேற்று விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் நெல் மூட்டைகளுடன் கூடைகளில் நெல்மணிகளை கொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கலெக்டரிடம் மனு அளித்தனர்.