சென்னை, ஆக.29: தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து போத்தீஸ் ஸ்வர்ண மஹால் ஷோரூம்களிலும் நாளை மறுநாள் வரை இந்த கொலுசு கொண்டாட்டம் நடக்கிறது. இந்த மேளாவில் 5,000க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில் வெள்ளிக் கொலுசுகள் இடம்பெற்றுள்ளன. வாடிக்கையாளர்கள் பாரம்பரிய Plain Silver Anklets முதல் அழகிய Antique மற்றும் Fancy Designer Anklets வரை பல்வேறு வடிவமைப்புகளைத் தேர்வு செய்யலாம். இந்த சிறப்பு சலுகையின் கீழ், Plain Silver Anklets-க்கு தயாரிப்புக் கட்டணம் இல்லை; ஜிஎஸ்டி-யும் இல்லை. வாடிக்கையாளர்களுக்கான ஜிஎஸ்டி தொகையை போத்தீஸ் ஸ்வர்ண மஹால் நிறுவனமே ஏற்கிறது. இதனால், வாடிக்கையாளர்கள் வெள்ளியின் எடைக்கு அன்றைய வெள்ளி விலை என்ற அடிப்படையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.
மேலும், Antique மற்றும் Fancy Devigner Ankle-க்கு MRP-யில் FLAT 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுகுறித்து போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் நிர்வாக இயக்குநர் சடையாண்டி ரமேஷ் கூறுகையில், இந்த பாரம்பரிய அணிகலனை கொண்டாடும் வகையில், ‘கொலுசு கொண்டாட்டம்’ மூலம் ஏராளமான வடிவமைப்புகளை சிறந்த மதிப்பில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்புகிறோம். “Plain Silver Anklets-க்கான ஜிஎஸ்டி தொகையை எங்கள் வாடிக்கையாளர்களுக்காக நாங்களே ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
5,000க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளுடன் நடைபெறும் இந்த ‘கொலுசு கொண்டாட்டம்’, தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு வெள்ளிக் கொலுசு வாங்கும் அனுபவத்தை ஒரு சிறப்பான கொண்டாட்டமாக மாற்றும் என நம்புகிறோம். ‘கொலுசு கொண்டாட்டம்’ சலுகை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போத்தீஸ் ஸ்வர்ண மஹால் ஷோரூம்களிலும் செல்லுபடியாகும். சென்னை ஜிஎஸ்டி ரோடு குரோம்பேட்டை, ருக்மணி நகர் பூந்தமல்லி, சி.ஜி.பி. ரோடு பாடி, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய ஷோரூம்களிலும் இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பெறலாம் என்றார்.



