Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஓஎம்ஆர் சாலையில் காவல் உதவி ஆணையரின் ஓட்டுநர் விபத்தில் பலி

சோழிங்கநல்லூர், ஜூன் 29: தாம்பரம் மாநகர ஆணையரகத்தின் உளவுத்துறை பெண் உதவி ஆணையரின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் ஜெய்கணேஷ் (45), வாகனத்தை எடுக்க நேற்று ஓஎம்ஆர் சாலையில் அவரது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சோழிங்கநல்லூர் அருகில் சென்று கொண்டிருந்தபோது ஜெய்கணேஷ் சென்ற இருசக்கர வாகனம் மீது தனியார் தண்ணீர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெய்கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஜெய்கணேஷ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.