Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வடகிழக்கு பருவமழை காரணமாக செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

குன்றத்தூர், அக்.23: வடகிழக்கு பருவமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி, பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 485 மி.கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 430 கன அடியாகவும், வெளியேற்றம் இணைப்பு கால்வாய் வழியாகவும், பேபி கால்வாய் வழியாகவும் என மொத்தம் 230 கன அடியாகவும் உள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கன அடியில், தற்போது தண்ணீர் இருப்பு 142 மி.கன கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 55 கன அடியாக உள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மி.கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2351 மி.கன அடியாக உள்ளது.

நீர்வரத்து வினாடிக்கு 1395 கன அடியாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 207 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மி.கன அடியில், தற்போது தண்ணீர் இருப்பு 242 மி.கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 85 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மி.கன அடியில், தற்போது தண்ணீர் இருப்பு 1466 மி.கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 545 கன அடியாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 184 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.