Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நல்லொழுக்க பயிற்சி முகாம்

காஞ்சிபுரம், ஜூலை 20: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் பட்டூரில் மாவட்டத் தலைவர் முஹம்மது அக்ரம் தலைமையில் பெண்களுக்கான இஜ்திமா எனும் நல்லொழுக்க பயிற்சி முகாம் தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் முஹம்மது அக்ரம் பெண்ணுரிமை போற்றும் பெருமானார் என்ற தலைப்பிலும், பேச்சாளர் ஆசியா ஆலிமா இஸ்லாத்தின் பார்வையில் அலங்காரம் என்ற தலைப்பிலும் பேசினார்கள். தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பேச்சாளர்கள் மைதீன், அப்துர் ரஹ்மான் குடும்பத்தை கட்டமைக்கும் இஸ்லாம், இஸ்லாமிய பார்வையில் குழந்தை வளர்ப்பு, ஒழுக்கத்தை பேணுவோம், பிறர் நலம் நாடுவோம் என்பது குறித்து பேசினார்கள்.

இதில் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும், வந்தே மாதரம் பாட மறுத்தால் மூன்றாண்டு சிறை தண்டனை மசோதாவுக்கு எதிர்ப்பும், தமிழகத்தில் மாட்டிறைச்சி அரசியல் செய்வதை கண்டித்தும், இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களின் உரிமையை பாதுகாப்பது, முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கையான தமிழகத்தில் முஸ்லிம்களின் உள் ஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி, பொருளாளர் அப்துல் காதர் மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.