Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மாமுல் தராததால் மீன் வியாபாரிக்கு வெட்டு

திருக்கழுக்குன்றம், ஜூன் 19: திருக்கழுக்குன்றம் அடுத்த ஈச்சங்கரணை கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம் (29), அப்பகுதியில் ஏரியிலிருந்து மீன் பிடித்து வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை திருக்கழுக்குன்றம் பரமசிவன் நகர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (28), சந்தோஷ் (29), இளங்கோவன் (25), கௌதம் (27) ஆகியோர் திருவேங்கடத்தின் கடைக்கு வந்து மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்க மறுத்த திருவேங்கடத்தை தலையில் மது பாட்டில்களால் 4 பேரும் சேர்ந்து அடித்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

திருக்கழுக்குன்றம் போலீசார் திருவேங்கடத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து, ஆகாஷை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற மூவரை தேடி வருகின்றனர்.