திருப்போரூர், ஆக.18: தாழம்பூரில் கிளினிக் பூட்டை உடைத்து ரூ.25,000, டேப்லெட் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். நாவலூரை அடுத்துள்ள தாழம்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் டாக்டர் முகமது ஹாசிக். இவரது, கிளினிக் அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கிளினிக்கிற்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. நேற்று காலை கிளினிக்கை திறக்க வந்தபோது. முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ.25,000 ரொக்கம், ஒரு டேப்லெட் போன்றவை திருடப்பட்டிருந்தது. மருத்துவர் முகமது ஹாசிக், இதுகுறித்து தாழம்பூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
+
Advertisement



