Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்

சோழிங்கநல்லூர், ஆக.18: புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த அஜுமுதீன் என்பரும், கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், அஜுமுதீன் நடவடிக்கை சரி இல்லாததால், கடந்த 6 மாதமாக அவருடன் பேசுவதை இளம்பெண் தவிர்த்து வந்துள்ளார்.ஆனால், அஜுமுதீன் அப்பெண்ணை அடிக்கடி பின்தொடர்ந்து சென்று, காதலிக்குமாறு கூறி வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், தண்டையார்பேட்டை, வள்ளலார் சாலையில் அந்த இளம்பெண்ணும், அவரது தோழியும் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அஜுமுதீன் அப்பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த அஜுமுதீனை (27) நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.