Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆடி முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஆதிகாமாட்சி அம்மன் கோயிலில் பெண்கள் பால்குட ஊர்வலம்

காஞ்சிபுரம், ஜூலை 18: காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடத்தப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பெரிய காஞ்சிபுரத்தில் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் எனப்படும் ஆதிகாமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு, நேற்று காலை கச்சபேஸ்வரர் கோயிலில் இருந்து ஏராளமான பெண்கள் தலையில் பால்குடம் சுமந்துகொண்டு, மேற்கு ராஜவீதி வழியாக ஊர்வலமாக வந்தனர்.

தொடர்ந்து, ஆதிகாமாட்சிக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்பு, ஆதிகாமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.