Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மது பிரியர்களிடம் வசூலிப்பதற்காக அச்சிறுபாக்கம் டாஸ்மாக் கடை அருகில் தீவிர வசூல் வேட்டை நடத்தும் போலீசார்

செய்யூர், ஜூன் 18: அச்சிறுபாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ள இடத்தின் அருகே போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் ‘எனி டைம் டியூட்டி’ பார்ப்பதாகவும் மது பிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் பகுதியில் இருந்து எலப்பாக்கம் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. அச்சிறுபாக்கம் காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள இந்த கடைக்கு நாள்தோறும் ஐநூறுக்கும் மேற்பட்ட மது பிரியர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, அரசு பள்ளி, கல்லூரி, கோயில் அருகேயுள்ள 717 அரசு மதுபான கடைகளை மூட வேண்டுமென உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வந்த பல மதுபான கடைகள் மூடப்பட்டன. குறிப்பாக மதுராந்தகம் மற்றும் கீழ் மருவத்தூர் பகுதிகளில் இயங்கி வந்த மதுபான கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் வேறு வழியின்றி நீண்ட தொலைவில் உள்ள அச்சிறுப்பாக்கம் அல்லது மதுராந்தகம் காந்தி நகரில் உள்ள டாஸ்மாக் கடைகள் வரை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்பு இக்கடைகளில் ஐம்பதுக்கும் குறைவான எண்ணிக்கையில் கூடிய மது பிரியர்கள் தற்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கூடுகிறார்கள். குறிப்பாக அச்சிறுப்பாக்கம் மதுபான கடைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மது பிரியர்கள் வந்து செல்கிறார்கள். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அச்சிறுப்பாக்கம் காவல் துறையினர் மது பிரியர்கள் மற்றும் சிறு, குறு வியாபாரிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்

றனர்.

மேலும் காவல் துறையினர் மதுபான கடை இயங்கும் 500 மீட்டர் தூரத்திற்கு உள்ளேயே வாகன தணிக்கை என்ற பெயரில் மது பிரியர்களிடம் மது கடத்துகிறாயா? குடித்திருக்கிறாயா என்று கேட்டு மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்ஐ முருகன் என்பவர் தலைமையில் போலீசார் மதுபான கடை அருகேயுள்ள பரோட்டா கடை, இறைச்சி கடைகளில் பணம் கொடுக்காமல் மிரட்டி இலவசமாக உணவு பெற்று செல்வதாக புகார் எழுந்துள்ளது. மேலும் மதுபான கடையில் இலவச சரக்கு என்று ஒரு அராஜகமே நடத்தி வருவதாகவும், இதற்கு உடந்தையாக காவல் ஆய்வாளர் இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். பொதுமக்களுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பை தவிர்த்து காவல் துறையினரே இதுபோன்று வசூல் வேட்டை, மிரட்டல் , விதிமீறல் உள்ளிட்ட அராஜக போக்கில் நடந்து கொள்வது பொதுமக்கள் மற்றும் மது பிரியர்களிடையே அதிருப்தியை ஏற்

படுத்தி உள்ளது.