Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

7வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

ஆலந்தூர், அக்.17: கிண்டி அண்ணா சாலையில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் 13 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு, கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்த ஒடிசாவை சேர்ந்த ட்ரிலோச்சன் பங்க்கி (36) என்பவர், நேற்று முன்தினம் இரவு, போதையில் 7வது மாடியில் படுத்து தூங்கியுள்ளார். நேற்று அதிகாலை, இவர் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்ததில், படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்து வந்த கிண்டி போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.