ஆலந்தூர், அக்.17: மூவரசம்பட்டு ராகவா நகர் 5வது தெருவை சேர்ந்த முத்துக்குமார் (34), பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 11ம் தேதி டெலிவரி பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என தகவல் வந்துள்ளது. உடனே, தன்னிடம் இருந்த ரூ.2.78 லட்சம் மதிப்புள்ள பொருட்களுடன் பைக்கில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு, வீட்டின் முன் பைக்கை நிறுத்திவிட்டு, முதல் தளத்தில் உள்ள மனைவியை பார்த்து உடல் நலம் விசாரித்துவிட்டு, மீண்டும் வந்து பைக்கை எடுக்க முயன்ற போது, டெலிவரி பொருட்களுடன் பைக் மாயமானதை கண்டு அதிர்ச்சடைந்தார். நங்கநல்லூரை சேர்ந்த பிரகாஷ் (27), சோழிங்கநல்லூர் ஜெயராமன் தெருவை சேர்ந்த பாலமுருகன் (27) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.


