காஞ்சிபுரம், அக்.17: காஞ்சிபுரம் மாநகராட்சி 11வது வார்டுக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம், கன்னியம்மன் கோயில், திருவேகம்பன் தெருவில் கடந்த 25 ஆண்டுகளாக 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி கலெக்டரிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 25 ஆண்டு காலமாக மின் இணைப்பு இல்லாமல் அவதிப்பட்டு வரும் தங்களுக்கு, மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று காஞ்சிபுரம் - கீழ்கதிர்பூர் சாலையில் அப்பகுதி பொதுமக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.


