Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருநிலை ஊராட்சியில் திறந்து கிடக்கும் குடிநீர்: கிணறால் நோய் அபாயம்

திருப்போரூர், செப்.17: திருநிலை ஊராட்சியில் திறந்து கிடக்கும் குடிநீர் கிணற்றில் பறவைகள், விலங்குகளின் கழிவுகள் கலக்கபடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய திருநிலை ஊராட்சியில் பொதுமக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் நிரப்பப்பட்டு, குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் வழங்கும் குடிநீர் கிணறுகள் திறந்த நிலையில் கிடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த, குடிநீர் கிணறுகள் திறந்த நிலையில் இருப்பதால் பறவைகள், விலங்குகளின் கழிவுகள் கலப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், குடிநீர் கிணற்றை ஒட்டி உள்ள மோட்டார் அறை மற்றும் மின் பெட்டி அறைகள் முழுவதும் செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது.

போதிய வருவாய் இல்லாமல் தவிக்கும் திருநிலை ஊராட்சியில், போதிய நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட இந்த ஊராட்சியில் புதிய சாலைகள் அமைத்தல், புதிய குடிநீர் கிணறுகள் ஏற்படுத்துதல் போன்ற அடிப்படை திட்டப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் சிறப்பு நிதி தொகுப்பு ஒன்றை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.