Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

ஏரியில் தொழிற்சாலை கழிவுகளுக்கு தீ வைப்பு: பொதுமக்கள் கடும் அவதி

ஸ்ரீபெரும்புதூர், அக்.16: ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூர் ஏரியில் தொழிற்சாலை கழிவுகள் மலைபோல கொட்டி தீ வைத்து எரிப்பதால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூர் ஊராட்சியில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் கொண்ட இந்த ஏரி மூலம், அதே பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கருக்கு விளைநிலங்கள் பாசன வசதி பெருகிறது. ஏரி நீர்பிடிப்பு பகுதியில் போந்தூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக், ரப்பர் போன்ற கழிவுகள் மூட்டைமூட்டையாக கொட்டி குவித்து தீ வைத்து எரிக்கப்படுகின்றன.

அதிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மை கொண்ட கரும்புகையால் அங்குள்ள குடியிருப்புவாசிகள் பாதிப்படைகின்றனர். அதேபோல் குடியிருப்புகள், தொழிற்சாலை கழிவுநீர் ஏரி நீர்வரத்து கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டு நேரடியாக ஏரியில் கலப்பதால் ஏரி மாசடைகிறது. இதனால் கால்நடைகளும், விவசாய நிலங்களுக்கும் ஏரி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. தொழிற்சாலை கழிவுகள், கழிவு நீரால் மாசடையும் ஏரியால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது என மக்கள் புகார் கூறுகின்றனர்.

எனவே, ஏரியில் தனியார் தொழிற்சாலை கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு, புதர்மண்டி காணப்படும் நீர்வரத்து கால்வாய்களையும் சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நீர்வளத்துறை அதிகாரிகள்; சம்பந்தப்பட்ட ஏரியில் ஆய்வு செய்து, தொழிற்சாலை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.