Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

மாமல்லபுரம் அருகே மரத்தில் தூக்கிட்டு மாணவன் தற்கொலை?

மாமல்லபுரம், அக்.16: மாமல்லபுரம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்த சரவணனின் மகன் சதீஷ் (17). திருக்கழுக்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக, மாணவன் பள்ளிக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் எச்சூர் காட்டில் உள்ள ஒரு நாவல் மரத்தின் உச்சியில் மாணவன் சதீஷ் தூக்கிட்டு பிணமாக தொங்குவதை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார், விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து கயிற்றில் தொங்க விட்டனரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.