Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பணி நேரத்தில் மதுபோதையில் தூக்கிய மின்வாரிய ஊழியர்

காஞ்சிபுரம், ஜூலை 16: காஞ்சிபுரத்தில் பணி நேரத்தில், மின்வாரிய ஊழியர் மதுபோதையில் தூக்கிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பகல் நேரம், இரவு நேரம் பணிக்கென மின்வாரிய ஊழியர்கள் ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்பட்டு, சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தமிழக அரசு அதற்கென கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளது. அதிலும், குறிப்பாக கடந்த சில நாட்களாக காஞ்சிபுரத்தில் அதிகளவில் இரவு நேரத்தில் மின்வெட்டு நிலவி வருவதால், கூடுதலாக கவனம் செலுத்தி இரவு நேரத்தில் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் ஓரிக்கை, வெள்ளாகுளம் துணை மின் நிலையத்தில் ஆபரேட்டர் ஒருவர், பணி நேரத்தில் அதீத மதுபோதையில் அரை நிர்வாணத்தில் படுத்து கிடந்துள்ளார். இதன் காரணமாக ஓரிக்கை துணை மின் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்ட நிலையில், மதுபோதையில் ஆபரேட்டர் படுத்திருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.