Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்

தாம்பரம், அக்.15: தாம்பரம், சமத்துவபுரம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி மஞ்சு. நிறைமாத கர்ப்பிணியான மஞ்சுவுக்கு நேற்று முன்தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வெங்கடேசன் மற்றும் மருத்துவ உதவியாளர் ஜெக்கேஷ்வரி ஆகியோர் தாம்பரம் பகுதிக்கு விரைந்து சென்றனர். மஞ்சுவை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு விரைந்தனர். அப்போது, மஞ்சுவுக்கு பிரசவ வலி மேலும் அதிகரித்தது.

இதையடுத்து ஆம்புலன்சிலேயே அவருக்கு சுகப்பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 108 ஆம்புலன்சில் குழந்தை பிறந்ததால் மஞ்சுவின் குழந்தை ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் பயன்பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.