Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வையாவூர் ஊராட்சியில் குடிநீர் கிணற்றை தூர்வார கோரிக்கை

மதுராந்தகம், செப்.11: செங்கல்பட்டு மாவட்டம் வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லம்பாக்கம் கிராமத்தில் சில மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கவில்லை என ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நுழைவு வாயில் முன்பு அப்பகுதி மக்கள் நேற்றுமுன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை அப்பகுதிக்கு வந்து ஊராட்சி இயக்குனர் ஜெகதீசன் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை குறித்து அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர்.

மேலும் தற்போது பயன்பாட்டில் இல்லாத ஒரு குடிநீர் கிணற்றை தூர்வாரி, சுத்தப்படுத்தி கொடுத்தால் அந்த கிணற்றை மீண்டும் குடிநீருக்கு பயன்படுத்தலாம் என கோரிக்கை விடுத்தனர். விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.