Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மேட்டுக்கொளத்தூர் பகுதியில் குழந்தைகள் கற்றல் மையம் ரேஷன் கடை திறப்பு

ஸ்ரீபெரும்புதூர், அக்.10: காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்கொளத்தூர் பகுதியில் இயங்கி வரும் டயர்கள் உற்பத்தி தொழிற்சாலை சமூக பொருப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.9.72 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம் மற்றும் குழந்தைகள் கற்றல் மையத்திற்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா, வட்ட வழங்கல் அலுவலர் பொற்கொடி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) வெள்ளாரை அரிகிருஷ்ணன் பங்கேற்று, ரேஷன் கடை மற்றும் குழந்தைகள் கற்றல் மையத்தை திறந்து வைத்தார்.

பின்னர், மேட்டுக்கொளத்தூர் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இனிப்பு, சேலை மற்றும் உணவு வழங்கினார். இந்நிகழ்வில் தனியார் நிறுவனத்தின் நிர்வாகி சகாயராஜ், மாகான்யம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர் (பொறுப்பு) தேவி, கொளத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கர், முனுசாமி, வார்டு உறுப்பினர்கள் திலகா டில்லிபாபு, சங்கர், தனசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.