Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவம் இன்று தொடக்கம்

காஞ்சிபுரம், அக்.10: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் இன்று முதல் தொடங்கி வரும் 22ம் தேதி வரை நவராத்திரி உற்சவம் நடைபெறவுள்ளது.  மகா சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி உற்வசம் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நவராத்திரி உற்சவம் இன்று தொடங்கி வரும் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. உற்சவ நாட்களில் தினசரி மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும் நடைபெறும். விழாவையொட்டி, இன்று காலை சண்டி ஹோமத்துடன் நவராத்திரி உற்சவம் தொடங்குகிறது.

நவராத்திரி உற்சவத்தை ஒட்டி நாள்தோறும் காலையில் நவ ஆவர்ண பூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜையும் நடைபெறுகிறது. இரவு உற்சவத்தில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி சிறப்பு அலங்காரத்தில் மங்கள மேளதாள வாத்தியங்களுடன் ஊர்வலமாக நவராத்திரி கொலு மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்து சூரசம்ஹாரமும், சிறப்பு தீபாராதனைகளும் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, பக்தி இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

உற்சவத்தின் 9வது நாளான வரும் 18ம் தேதி துர்கை புறப்பாடும், 19ம் தேதி சரஸ்வதி பூஜையும், 20ம் தேதி விஜயதசமியையொட்டி நவ ஆவர்ண பூஜை பூர்த்தியும், பஞ்சகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, 22ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் நவராத்திரி உற்சவம் நிறைவு பெறுகிறது.

நவராத்திரி உற்சவத்திற்கான ஏற்பாடுகளை காஞ்சி சங்கராச்சாரியார்  விஜயேந்திரர், இளைய சங்கராச்சாரியார்  சத்திய சந்திரசேகரேந்திரர் ஆகியோரின் ஆலோசனையின்பேரில், கோயில் காரியம் மற்றும் கோயில் ஆதீன ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் செய்து வருகின்றனர்.