Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பூங்காநகர் ரயில் நிலையத்தில் தொழிலாளி தவறவிட்ட தங்க நகை, பணம் மீட்பு

சோழிங்கநல்லூர், ஆக.10: பூங்காநகர் ரயில் நிலையத்தில் கூலி தொழிலாளி தவறவிட்ட தங்க நகை, பணத்தை மீட்டு ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்த பூங்காநகர் ரயில் நிறுத்தத்தில் ரயில்வே போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படி ஒரு பேக் இருந்தது. அதை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் தங்க நகை இருப்பது தெரியவந்தது. இதனை யார் தவறவிட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி முறிச்சம்பேடு கிராமத்தை சேர்ந்த பரத்குமார் என்ற கூலி தொழிலாளி நேற்று குடும்பத்துடன் தி.நகர் செல்வதற்காக மின்சார ரயிலில் சென்னை சென்ட்ரல் சென்று அங்கிருந்து பூங்கா நகர் ரயில் நிலையத்திற்கு சென்று மின்சார ரயிலில் தி.நகர் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது அவர்கள் வைத்திருந்த பையை அங்கேயே வைத்துவிட்டு மறந்து சென்றுவிட்டனர் என்று தெரியவந்தது.

அதில் ஒரு சவரன் தங்க செயின், கால் சவரன் கம்மல், கால் சவரன் ஜிமிக்கி, மோதிரம், ரூ.500, இரண்டு செல்போன்கள் இருந்தது. மேலும் பையை தவறவிட்டது பரத்குமார்தான் என்பதை விசாரணை நடத்தி உறுதி செய்ததை தொடர்ந்து, அந்த பொருட்களை அவர்களிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.