Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருப்போரூர் அருகே கார் மோதி விபத்து 11 பைக்குகள் சேதம்

திருப்போரூர், ஆக.10: திருப்போரூர் அருகே கார் மோதியதில் 11 பைக்குகள் சேதமாகின. கார் ஓட்டி வந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மானாம்பதி அடுத்த குன்னப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார் (28). சிறுசேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கணினி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று அதிகாலை பணி முடிந்து தனது வீட்டிற்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். குன்னப்பட்டு பகுதியில் தொழில் நிறுவனங்கள் நிறைந்த ஜப்பான் சிட்டி வழியாக வந்தபோது, தனியார் தொழிற்சாலை வெளியில் நிறுத்தப்பட்டிருந்த பைக் மீது அவரது கார் பயங்கரமாக மோதியது.

அப்போது காரில் இருந்த பாதுகாப்பு பலூன் திறந்ததால் சுகுமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

ஆனால், கார் மோதிய வேகத்தில் அடுத்தடுத்து 11 பைக்குகள் கடும் சேதமடைந்தன. காரின் முன்பகுதி சேதமானது. மானாம்பதி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சேதமடைந்த பைக்குகள், காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர். அதிகாலை நேரத்தில் விபத்து நடந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் உத்தரவின்பேரில், மானாம்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.