Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பூண்டு சித்தேரி நீர்த்தேக்கத்தில் கருவேல மரங்கள் அகற்றம்

மதுராந்தகம், செப்.9: சிலாவட்டம் ஊராட்சியில் உள்ள பூண்டு சித்தேரி நீர்த்தேக்கத்தில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில், சிலாவட்டம் ஊராட்சி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தின் பின்புறம் பூண்டு சித்தேரி நீர்த்தேக்கம் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட சீமை கருவேல மரங்கள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. இதனால் பருவ மழை காலங்களில் மழை நீர் அந்த நீர்த்தேக்கத்தில் தேங்கி நிற்காமல் வீணாக வெளியேறி வந்தது.

இந்நிலையில் பருவ மழை தொடங்க உள்ளதால் பூண்டு சித்தேரியில் முளைத்திருந்த சீமை கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி பொக்லைன் இயந்திரம் மூலம் கருவேல மரங்களை வேரோடு தோண்டி எடுத்து அப்புறப்படுத்தும் பணி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த பணியினை மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில், நீர்த்தேக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய குட்டைக்கும் தண்ணீர் செல்லும்படி மரம், செடி-கொடிகள் அகற்றப்பட்டன.