Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

காவல் நிலையங்களில் மக்கள் குறைதீர் கூட்டம்

செங்கல்பட்டு, ஜூலை 9: தமிழகம் முழுவதும் காவல் நிலையத்திலும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டி தமிழக அரசு காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு புதன் கிழமை மற்றும் சனிக்கிழமை என வாரம் இரண்டு நாட்களில் பொதுமக்களிடம் மனு அளிக்கலாம். குறிப்பாக மனுக்களை நேரடியாக அந்தந்த காவல் ஆய்வாளர்தான் பெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் நேற்று பொதுமக்களிடம் இருந்து புகார் மனுவை பெற்றனர்.

புகார் கொடுத்து அந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, சிஎஸ்ஆர், முதல் தகவல் அறிக்கை குறித்த நேரத்தில் முறையாக வழங்கப்படவில்லை, உரிய நேரத்தில் விசாரணை நடத்தப்படவில்லை என காவல்துறை மீது தொடர்ந்து புகார்கள் வருவதை தடுக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.