Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்த புரோக்கர் கைது

சோழிங்கநல்லூர், ஜூலை 8: சென்னை மேற்கு மாம்பலம் சத்தியபுரி தெருவில் ெபாதுமக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீடு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இரவு நேரங்களில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் வந்து செல்வதாக விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் யாஸ்மினுக்கு புகார் வந்தது. அதன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவகுமாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி போலீசார் நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2வது மாடியில் உள்ள சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தியபோது, திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் காரைமேடு தெருவை சேர்ந்த ராஜேஸ்வரன் (33) என்பவர் இளம்பெண் ஒருவரை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.அதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார், ராஜேஸ்வரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவரிடம் இருந்து மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மீட்கப்பட்டார்.