Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலில் பயணிகளை ஏறவிடாமல் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்: வீடியோ வைரல்

தாம்பரம், செப்.7: சென்னை எழும்பூரில் இருந்து நேற்று முன்தினம் வேளாங்கண்ணி நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையம் வந்தது. அப்போது தாம்பரம் ரயில் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் ரயிலில் ஏற முயற்சித்தபோது, ரயில் பெட்டிக்குள் செல்லும் வழியில் சில இளைஞர்கள் அமர்ந்துகொண்டு உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ரயிலில் ஏற முயன்ற பயணிகளை உள்ளே ஏறவிடாமல் அந்த இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ரயிலில் ஏற முயன்ற பயணிகள் உள்ளே ஏறுவதற்கு வழி விடும்படி அந்த நபர்களிடம் தெரிவித்தனர். அப்போது அந்த இளைஞர்கள் இங்கே ஏறாதே என கூறி பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஒரு கட்டத்தில் பயணிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், தகாத வார்த்தைகளால் சாபமிட்டனர். மேலும் இங்கே ஏறக்கூடாது, வேறு பெட்டியில் ஏறிக்கொள், நாங்கள் இங்குதான் அமர்வோம், எங்களை வழி விடும்படி தொல்லை செய்தால் ஆடையை கழற்றிவிட்டு இங்கே உட்காருவோம், உங்களால் என்ன செய்ய முடியும் என பயணிகளிடம் அந்த நபர்களில் ஒருவர் சவால் விட்டார். அதற்குள் சத்தம் கேட்டு அங்கு வந்த டிடிஆர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினரும் அந்த இளைஞர்களிடம் வழி விடும்படி கேட்டுள்ளனர்.

ஆனால் அவர்களிடமும் அந்த இளைஞர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடைசி வரை ரயிலில் இருந்து எழுந்து செல்லாமல், பயணிகள் மற்றும் அதிகாரிகளை ஆபாச வார்த்தைகளால் அந்த இளைஞர்கள் திட்டிய சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரு

கிறது. ரயிலில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.