Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பள்ளி வளாகத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: 110 கிராம் பறிமுதல்

செங்கல்பட்டு, செப்.5: செங்கல்பட்டில் பள்ளி வளாகத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் போதை பொருட்களை கட்டுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனது. போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து சிறையில் அடைப்பது மட்டும் அல்லாமலும், அவர்களின் வங்கி கணக்கை முடக்குவது போன்ற தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு நகரில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

அதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கஞ்சா விற்பனை செய்த இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கைதான நபர்கள் செங்கல்பட்டு அழகேசன் நகரை சேர்ந்த சந்திரசேகர் (28) மற்றும் மேலமையூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20) என தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.