Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், செப்.5: காஞ்சிபுரத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் மாநில மையம் சார்பில், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட கிளையின் சார்பில், கிராம உதவியாளர்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியமான `டி கிரேடு’ ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, காஞ்சிபுரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், ஏராளமான சங்க நிர்வாகிகளும், கிராம உதவியாளர்களும் கலந்துகொண்டு, கிராம உதவியாளர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.