Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆந்திராவில் இருந்து உரிய அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த 5 லாரிகள் பறிமுதல்

ஊத்துக்கோட்டை, நவ.4: ஆந்திராவில் இருந்து உரிய அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து வந்த 5 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலத்திலிருந்து அனுமதியின்றி கிராவல் மண் லாரிகளில் கொண்டு வருவதாக புவியியல் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மண்டல பறக்கும்படை உதவி இயக்குனர் சீனிவாசராவ் மற்றும் அதிகாரிகள் பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து கிராவல் மண் ஏற்றிக்கொண்டு வந்த 5 லாரிகளை மடக்கி சோதனை செய்தனர்.

அதில் சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டிய ரசீதை பயன்படுத்தி, சென்னைக்கு கொண்டு செல்லாமல் கன்னிகைப்பேர் கிராமத்திற்கு கிராவல் மண் கொண்டு சென்றது தெரிய வந்தது. அப்போது, டிரைவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதனையடுத்து அதிகாரிகள் 5 லாரிகளையும் பறிமுதல் செய்து, பெரியபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய டிரைவர்கள் மீது புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிந்து லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.