Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாமல்லபுரம் வெண்புருஷம் சாலையில் சேதமடைந்த மின்கம்பம் சீரமைப்பு

மாமல்லபுரம், ஜூன் 3: மாமல்லபுரம் வெண்புருஷம் சாலையில் சேதமடைந்த மின்கம்பம் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டது. மாமல்லபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வெண்புருஷம் பகுதிக்கு செல்லும் சாலையையொட்டி பல ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரத்துறை மூலம் மின் கம்பங்கள் நடப்பட்டன. அதில் சில மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்பட்டன. அந்த மின்கம்பங்களை ஒவ்வொன்றாக மாமல்லபுரம் மின்வாரிய அதிகாரிகள் சீரமைத்து வருகின்றனர். ஆனால், சாய்பாபா கோயில் அருகேயுள்ள மின்கம்பம் ஒன்று விரிசல் ஏற்பட்டு சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, அதன் கம்பிகள் வெளியே தெரிந்து எலும்புக்கூடு போல் காட்சியளித்தது.

இதையடுத்து மாமல்லபுரம் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பம் நட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்று, மாமல்லபுரம் மின்வாரிய அதிகாரிகள் நேற்று நேரில் வந்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பம் அமைத்தனர். விரைந்து வந்து விபத்து ஏற்படுவற்கு முன் புதிய மின்கம்பம் அமைத்த மின் வாரிய அதிகாரிகளை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.